ADVERTISEMENT

தனுஷின் ஜோடியான தீவிர ரசிகை...

05:54 PM Oct 31, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், 'வடசென்னை', 'அசுரன்', 'பட்டாஸ்' ஆகிய படங்களுக்குப் பிறகு, தற்போது 'கர்ணன்' படத்திலும், 'அத்ராங்கி ரே' என்ற இந்திப் படத்திலும் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து, சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் அடுத்து நடிக்கவுள்ள படம் அவரின் 43 ஆவது படமாகும்.

இப்படத்தை, 'துருவங்கள் பதினாறு', 'மாஃபியா' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படத்தின் கதாநாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

தமிழில் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம், அறிமுகமான மாளவிகா மோகனன், இப்படத்தில் தனுஷின் ஜோடியாகிறார். இவர் ஒரு பேட்டியில் தான், தனுஷின் தீவிர ரசிகை எனவும், அவருடன் நடிக்க விரும்புவதாகவும் கூறியிருந்தார். இவர் விஜயின் ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT