malavika mohanan shared experience about thangalaan

நடிகை மாளவிகா மோகனன் தற்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக தீவிர உடற் பயிற்சியும் சிலம்ப பயிற்சியும் மேற்கொண்டார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisment

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விக்ரமிற்கு அடிபட்டது. இதில் காயம் ஏற்பட்டு விலா எலும்பு முறிந்தது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து விக்ரம் பூரண குணமடைந்து விட்டார். இதனால் மீண்டும் அண்மையில் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.

Advertisment

இந்த படப்பிடிப்பில் மாளவிகா மோகனன் கலந்து கொண்ட நிலையில் தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "தினமும் 4 முதல் 5 மணிநேரம் மேக்கப் மற்றும் காஸ்ட்யூம் நேரம் தேவைப்படும் ஒரு கேரக்டரில் நீங்கள் நடிக்கும் போது, அதற்காக அவ்வளவு நேரம் அசையாமல் உட்கார்ந்திருப்பது மிகப்பெரிய சவாலாக அமைந்தது" என குறிப்பிட்டுள்ளார்.