dhanush

Advertisment

பாலிவுட்டில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனரான ஆனந்த் எல் ராய் படத்தில் தற்போது தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். கர்ணன் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து பின்னர் உடனடியாக அந்தரங்கி ரே என்னும் அந்த இந்தி படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படம் முடிவடைந்ததும் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. சத்யஜோதி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Advertisment

இந்த படத்திற்கு முன்பே சத்யஜோதி நிறுவனம் தயாரித்து ராம்குமார் இயக்க இருக்கும் படத்தில் தனுஷ் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.

முழுக்க கிராபிக்ஸ் பின்னணியில் உருவாகும் படம் என்பதால், அனைத்தையும் திட்டமிட்டுவிட்டு, பின்பு படப்பிடிப்புக்குச் செல்லப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்துக்கு 'வால் நட்சத்திரம்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராம்குமார் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கும் முன்பு, கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படம், மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள படம் ஆகியவற்றை முடிக்கத் திட்டமிட்டுள்ளார் தனுஷ்.