ADVERTISEMENT

மேலும் மூன்று சர்வதேச விருதுகளை வென்ற மகாமுனி திரைப்படம்!

04:41 PM Jul 30, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் மகாமுனி. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தபோதிலும் வணிக ரீதியாக படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. இருப்பினும், தமிழில் வெளியான மிகச்சிறந்த படங்களுள் ஒன்றாக மகாமுனி சினிமா ரசிகர்களால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளையும் மகாமுனி திரைப்படம் வென்றுவருகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் பூடானில் சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் மகாமுனி திரைப்படம் திரையிடப்பட்டது. விழா முடிவில், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் உட்பட மூன்று பிரிவுகளில் மகாமுனி திரைப்படம் விருதுவென்றது. இத்தகவலை இயக்குநர் சாந்தகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT