arya

இயக்குனர் சக்தி சௌந்தராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஸா, சாக்ஷி அகர்வால், சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் டெடி. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராக இருந்தது.

Advertisment

கரோனா காரணமாக தியேட்டர் மூடப்பட்டதையடுத்து இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இருப்பினும், போதிய அளவு ரசிகர்கள் வரவு இன்மையால், வெளியான சில திரைப்படங்களும் வணிக ரீதியில் பின்னடைவைச் சந்தித்தன. ஆகையால், இயல்பு நிலை திரும்ப சற்று கூடுதல் காலம் எடுக்கும் என்பதை உணர்ந்த படத்தின் தயரிப்பாளர் ஞானவேல் ராஜா, டெடி படத்தினை ஓடிடி-யில் ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கினார். இந்த நிலையில், டெடி படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளதாகவும், படம் வெளியாகும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இதனையடுத்து, டெடி படம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.