அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். இதனை தொடர்ந்து கார்த்தியை வைத்து மெட்ராஸ், ரஜினியை வைத்து கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

Advertisment

arya

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

காலா படத்திற்கு பிறகு பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து பாலிவுட்டில் பெரும் பொருட்செலவில் படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த படம் தற்போது கைவிடப்பட்டதால் ஆர்யாவை வைத்து சல்பேட்டா என்றொரு படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் ஆர்யா பாக்ஸராக நடிப்பதால் தன்னுடைய உடம்பை கடினமான உடற்பயிற்சியின் மூலம் ஏற்றியிருக்கிறார். மேலும் பாக்ஸிங் பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

Advertisment

இந்நிலையில் இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக இந்த படத்தில் நடிப்பது யார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் 'போதை ஏறி புத்தி மாதிரி' படத்தின் மூலம் அறிமுகமான துஷாரா நாயகியாக நடிக்கிறார். ஜனவரி மாதத்திலிருந்தே இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.