ADVERTISEMENT

விஜய் தேவரகொண்டா கொடுத்த அப்டேட்; உற்சாகத்தில் ரசிகர்கள்

06:46 PM Jul 16, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் இயக்கும் 'லைகர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'தர்மா புரொடக்ஷன்' தயாரிக்கும் இப்படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல குத்துச்சண்டை வீரர் 'மைக் டைசன்' முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் க்ளிம்பஸ் வீடியோ மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ட்ரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் ட்ரைலர் வரும் 21 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT