/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/499_7.jpg)
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் 'லைகர்'. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் நாளிலிருந்தே நெகட்டிவ் விமர்சனங்களையே சந்தித்து வருகிறது. இப்படத்தின் தோல்விக்கு விஜய் தேவரகொண்டாவின் பேச்சுதான் காரணம் என அண்மையில் திரையரங்கு உரிமையாளர் மனோஜ் தேசாய் என்பவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.
சமீபத்தில் இப்படம் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் விஜய் தேவரகொண்டா. அப்போது ஒரு நிகழ்வில் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, லைகர் படத்தை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது, அப்படி ஏதும் செய்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னை விமர்சித்து பேசிய மனோஜ் தேசாயை நேரில் சந்தித்து ஆசிபெற்றுள்ளார் விஜய் தேவரகொண்டா. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அந்த சந்திப்பில் தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று விஜய் தேவரகொண்டா விளக்கமளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மனோஜ் தேசாய் இனி விஜய்தேவரகொண்டா நடிக்கும் அனைத்து படத்தையும் எங்களது திரையரங்கில் வெளியிடுவோம் என்றும் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளதாகவும் பாராட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)