/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/239_4.jpg)
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லைகர்'. இப்படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களோடு பிரபல குத்துச்சண்டை வீரர் 'மைக் டைசன்' முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'தர்மா புரொடக்ஷன்' சார்பாக கரண் ஜோகர் தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் 'லைகர்' படத்திற்கு சமூக வலைத்தளத்தில் சில ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாலிவுட்டில் நெப்போட்டிசம் (வாரிசு ஆதிக்கம்) அதிகம் உள்ளதாகவும் அது சம்மந்தப்பட்ட நபர்களின் படங்களை புறக்கணித்து வருவதாகவும் பதிவிட்டு #BoycottLigerMovie என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் கரண் ஜோகர் இப்படத்தை தயாரித்துள்ளதால் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இதே போல் சமீபத்தில் வெளியான அமீர்கானின் 'லால் சிங் சத்தா' படத்திற்கும் அக்ஷய்குமார், ஆலியா பட் உள்ளிட்ட சில பாலிவுட் பிரபலங்களின் படத்திற்கும் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)