ADVERTISEMENT

விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படத்தின் பூஜை!

11:30 AM Dec 15, 2023 | dassA

ADVERTISEMENT

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் வழங்கும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி” பூஜையுடன் துவங்கியது

ADVERTISEMENT

இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில் புதுவிதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, தயாரிப்பாளர் லலித்குமார், இணைத் தயாரிப்பாளர் விஷ்ணு குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு பிரதீப் E ராகவ் செய்கிறார். உடை வடிவமைப்பை பிரவீன் ரஜா செய்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார். இணைத் தயாரிப்பாளர் L.K.விஷ்ணு குமார். கலக்கலான காதல் காமெடிப் படங்களுக்கு பெயர் பெற்ற விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணி இப்படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT