Pradeep Ranganathan acting in Vignesh Shivan next

Advertisment

இயக்குநர் விக்னேஷ் சிவன், அஜித்தின் 62வது படத்தை இயக்க கமிட்டான நிலையில் சில காரணங்களால் அதிலிருந்து விளக்கப்பட்டுவிட்டார். அஜித்தை இயக்கும் வாய்ப்பை தவறவிட்ட விக்னேஷ் சிவன் அடுத்து யாரை இயக்கவுள்ளார் என்ற கேள்வி உலா வரத்தொடங்கின. அந்தக் கேள்விக்கு விடை தரும் வகையில் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து விக்னேஷ் சிவன் ஒரு படம் எடுக்கவுள்ளதாகத்தகவல் வெளியானது. மேலும் இப்படம் ஆக்‌ஷன் ஜானரில் இருக்கும் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இப்படம் பற்றிய மற்றொரு தகவல் வளியாகியுள்ளது.

இப்படத்தில் 'லவ் டுடே' பட புகழ் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி அல்லாமல்மற்றொரு முதன்மை கதாபாத்திரம் இருப்பதாகவும் அதில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்ததாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இப்படம் தற்போது இந்தியில் ரீமேக்காகிறது. ஆனால் இந்தியில் வேறொரு இயக்குநர் இயக்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும்பிரதீப் ரங்கநாதன்தனது மூன்றாவது படமாக மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படம் எடுக்கவுள்ளதாகப் பேசப்படுகிறது.