ADVERTISEMENT

கோலிவுட் முதல் பாலிவுட் வரை ; புஷ்கர் காயத்ரி படைப்பிற்கு குவியும் பாராட்டுக்கள்

07:03 PM Jun 20, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் திரையுலகில் படங்களை தாண்டி தற்போது வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ‘விக்ரம் வேதா’ இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி எழுதி, தயாரித்துள்ள சீரிஸ் 'சுழல்'. பிரம்மா மற்றும் அருண்சரண் இருவரும் இணைந்து இயக்கியுள்ள இந்த சீரிஸில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த சீரிஸின் முதல் சீசனான 'சுழல்: தி வோர்டெக்ஸ்', சில தினங்களுக்கு முன்பு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த வெப் சீரிஸை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் தனுஷ் தனது பாராட்டை தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் நடிகை சமந்தா, இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் இந்த 'சுழல்: தி வோர்டெக்ஸ்' வெப் சீரிஸிற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், " சுழல், ஒரு விஷுவல் ட்ரீட் மற்றும் ஒரு ட்ரெண்ட் செட்டிங் வெப் சீரிஸ். புஷ்கர் அண்ணா மற்றும் காயத்ரி அக்கா இருவருக்கும் வாழ்த்துக்கள். கதிர் சக்கரை கதாபாத்திரத்திலும், ஸ்ரேயா ரெட்டி ரெஜினாவாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நந்தினியாகவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டு சாம் சி. எஸ். உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அனிருத் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ''சுழல்: தி வோர்டெக்ஸ் தொடரில் என்னுடைய சகோதரர் சாம் சி. எஸ். அவர்களின் டைட்டில் பாடல் வியக்க வைத்தது. பின்னணி இசையும் பரபரப்பாக கதையோட்டத்துடன் இணைந்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.'' எனத் தெரிவித்துள்ளார். மேலும் பாலிவுட் திரைபிரபலங்கள் ஹன்சல் மேத்தா, அனுராக் காஷ்யப், நடிகை வித்யா பாலன், நடிகை பூமிகா பட்நாகர், நடிகர் விக்ராந்த் மாஸே உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT