'பிகிலு'க்குப் பிறகுநடிகர் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'மாஸ்டர்'. தமிழ் திரையுலகின்முன்னணி நடிகர்கள் அனைவரும் தற்போது இளம் இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகின்றனர். இது ஒரு ட்ரெண்டாகவே பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த், பா.ரஞ்சித் படத்தில் நடித்ததன் மூலம் இதை தொடங்கி வைத்தார் என்று சொல்லலாம். தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'பேட்ட' படத்தில் நடித்தார் ரஜினி. இப்படம் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, இடையில் முருகதாஸ் இயக்கத்தில் 'தர்பார்' நடித்த ரஜினி, தற்போது அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.

master second look

இன்னொரு முன்னணி நடிகரான அஜித், இரண்டே படங்கள் இயக்கிய ஹெச்.வினோத் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை', அதை தொடர்ந்து இன்னொரு படத்திலும் நடித்து வருகிறார். ஹெச்.வினோத், இயக்கிய முதல் இரண்டு படங்களான 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' இரண்டுமே பெரிய வெற்றியோடு பாராட்டுகளையும் பெற்றவை.

Advertisment

Advertisment

இந்நிலையில் தொடர்ந்து அட்லீ, முருகதாஸ் படங்களில் நடித்து வந்த விஜய், இரண்டே படங்கள் இயக்கிய லோகேஷ் கனகராஜை அடுத்த படம் இயக்க அழைத்தார். லோகேஷ் இயக்கிய 'மாநகரம்', 'கைதி' ஆகிய இரண்டு படங்களுமே வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்றவை. அஜித்தை இயக்கும் ஹெச்.வினோத், விஜயை இயக்கும் லோகேஷ் இருவருமே தரமான இயக்குனர்களாகப் பார்க்கப்படுபவர்கள்.

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் 'மாஸ்டர்' படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின்டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. தற்போது பொங்கல் தினத்தன்று ரசிகர்களை குஷிப்படுத்தும் விதத்தில் படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இரண்டுமே 'இது வேற மாதிரி படம்' என்று சொல்வது போல இருக்கின்றன. இப்படி அமைந்ததன் காரணம், விஜய்யின் இயக்குனர் தேர்வு என்றே கூறப்படுகிறது. அந்தத் தேர்வு வெற்றி அடைந்ததா என்பது வரும் ஏப்ரலில் தெரிய வரும்.