ADVERTISEMENT

‘விஜய் நடித்ததில் என்னுடைய ஃபேவரைட் புலி படம்தான்’- கொலைகாரன் ஹீரோயின்

11:41 AM Jun 07, 2019 | santhoshkumar

கடந்த 2015ஆம் ஆண்டு சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் புலி. இது மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. விஜய் நடித்து வெளியான தோல்வி படங்களில் புலி மிக முக்கியமான இடத்தை பிடித்தது. இப்படம் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்று சொல்லப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் கொலைகாரன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாடல் ஆஷிமா நர்வால் தான் ஒரூ தீவிர விஜய் ரசிகை என்று சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் தெறி படத்தை முதல் நால் முதல் ஷோ பார்த்ததில் இருந்து நான் தீவிரமான விஜய் ரசிகையாகிவிட்டேன். நீங்கள் என்னை முட்டாள் என்று கூட நினைத்துக்கொள்ளுங்கள், விஜய் நடித்ததில் எனக்கு புலி படம் தான் பேவரைட், ஆனால் பலருக்கு அந்த படம் பிடிக்கவில்லை என்று ஆஷிமா கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய மாடலான இவர் 2018ஆம் ஆண்டு தெலுங்கு படத்தில் அறிமுகமாகி தற்போது தமிழில் முதன் முறையாக அறிமுகமாகிறார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT