ADVERTISEMENT

யாஷின் பிறந்தநாள் விருந்து... இணையத்தில் ட்ரெண்டாகும் 'கே.ஜி.எஃப் 2' பட போஸ்டர் 

10:22 AM Jan 08, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகி வருகிறது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணியில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது.

இந்நிலையில் படத்தின் நாயகன் யாஷ் இன்று (8.1.2022) தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதற்காக 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படக்குழு படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. நடிகர் யாஷ் மாஸான லுக்கில் மிரட்டும் இந்த போஸ்டர் ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT