'KGF2' in the collection hunt; Great achievement aside from leading films

Advertisment

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'கே.ஜி.எஃப் 2'. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கன்னடத்தில் உருவாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியானது. இப்படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் 'கே.ஜி.எஃப் 2' படத்தின் இந்தி பதிப்பகம் மாபெரும் வசூல் சாதனை செய்துள்ளது. இந்தியில் இதற்கு முன்பு ரன்பிர் கபூர் நடிப்பில் வெளியான 'சஞ்சு', அமீர் கான் நடிப்பில் வெளியான 'பிகே' மற்றும் சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த 'டைகர் ஜிந்தா ஹை' படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. மொத்தம் இந்தியில் மட்டும் 341கோடி ருபாய் வசூல் செய்து இந்தியில் அதிக வசூல் செய்த படங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில 'பாகுபலியும்', இரண்டாவது இடத்தில் 'தங்கல்' படமும் இருப்பதுகுறிப்பிடத்தக்கது.