KGF actor BS Avinash survives a road accident

Advertisment

யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் கே.ஜி எஃப். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகமும்பெரும் வெற்றி பெற்று வசூல் ரீதியாக மாபெரும் சாதனை படைத்தது. இந்த படங்களில் நடித்து பிரபலமான கன்னட நடிகர்களில்அண்ட்ருஸ் கதாபாத்திரத்தில் நடித்து பி.வி அவினாஷும் ஒருவர்.

இந்நிலையில் நடிகர் பி.வி அவினாஷ் கடந்த புதன்கிழமை தான் பெரும் விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளதாகதெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமுகவலைத்தள பதிவில், “காலை சரியாக 6.05 மணிக்கு நான் உடற்பயிற்சி கூடத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் அணில் கும்ப்ளே சர்க்கிள் அருகே உள்ள சாலையில் சிவப்பு விளக்கைமீறி வேகமாக வந்த கண்டெய்னர் லாரி என் கார் மீது மோதியது. அதில் என் காரின் முன் பேனல் சுக்கு நூறாக உடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எனக்கு எந்த காயம் ஏற்படவில்லை. கடவுளுக்கும், உங்கள் அன்புக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.