ADVERTISEMENT

"இப்படத்தில் நான் ஒரு கம்யூனிஸ்ட்" - கீர்த்தி சுரேஷ்

04:12 PM Jun 02, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளன. இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. சிறப்பு விருந்தினராக கமல் பங்கேற்றார். உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இசை வெளியீடு விழாவிற்கு படக்குழுவினர் உட்பட பல திரை பிரபலங்கள் வருகை தந்த நிலையில், படம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது கீர்த்தி சுரேஷ் பேசியதாவது, “மாமன்னன் போன்ற ஒரு பெரிய படத்தில் பணியாற்றியது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் எனக்கு ஒரு ரிலீஸ் இந்தப் படம். இந்தப் படத்தில் நான் ஒரு கம்யூனிஸ்டாக நடிக்கிறேன். இது வேறு மாதிரி வித்தியாசமான ஒரு படமாக இருக்கும். அனைவரும் கனெக்ட் செய்துகொள்ளக் கூடிய கதையாக இது இருக்கும். ஒவ்வொரு பெண்ணும் நிச்சயம் இதை கனெக்ட் செய்துகொள்ள முடியும்.

பகத் சாருடன் எனக்கு காம்பினேஷன் காட்சிகள் குறைவு. படம் சீரியஸாக இருந்தாலும் உதய் சாரும் வடிவேலு சாரும் செட்டில் எப்போதும் ஜாலியாக இருப்பார்கள். நாங்கள் அதிக டேக் எடுப்பதால் இயக்குநர் தான் கொஞ்சம் கஷ்டப்பட்டார். இந்தப் படத்தில் வடிவேலு சார் பாடிய பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய சோலோ பாடலும் எனக்குப் பிடித்த ஒன்று. என்னுடைய திருமணம் குறித்த வதந்திகளுக்கு நான் பதில் சொல்லிவிட்டேன். நடக்கும்போது நிச்சயம் நானே சொல்கிறேன்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT