/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/229_6.jpg)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ளதாலும் மாரி செல்வராஜ் படம் என்பதாலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.
மேலும் உதயநிதியின் ரசிகர்கள் திரையரங்கில் ஸ்வீட் கொடுத்தும் வெடி வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தைப் பார்த்த கமல், தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தியிருந்தனர். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்தியிருந்ததாக மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உதயநிதி, மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துள்ளனர். அப்போது கீர்த்தி சுரேஷ் பேசுகையில், "மாரி செல்வராஜ் நினைத்தது போல அவர் சொல்ல ஆசைப்பட்டதை நல்லபடியாக செய்து முடித்திருக்கிறார். உடன் நடித்த எல்லோருக்கும் நன்றி. பல நல்ல விஷயங்கள் நடக்க இது ஒரு தொடக்கமாக இருக்குமென நம்புகிறேன்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)