Skip to main content

'நான் சொன்னது போல நடந்தது' - கீர்த்தி சுரேஷ்

Published on 18/08/2023 | Edited on 18/08/2023

 

keerthy suresh speech at maamannan 50th day celebration

 

மாரி செல்வராஜ் இயக்கி உதயநிதி, வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் நடித்து கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியான 'மாமன்னன்', வெற்றிகரமாக 50 நாளை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான், வடிவேலு, மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். 

 

அமைச்சர் உதயநிதி பேசுகையில், அனைத்து படக் குழுவினர்களையும் பாராட்டினார். பின்னர், படப்பிடிப்பின் போது நிகழ்ந்த சம்பவங்களை விவரித்தார். ஏ.ஆர். ரஹ்மானின் முக்கியத்துவம் குறித்தும் மாரி செல்வராஜ் இந்த படத்திற்கு செலவிட்ட உழைப்பையும் பற்றி பேசினார். வடிவேலு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால் படத்தை எடுக்க வேண்டாம் என நினைத்ததாகவும் பகிர்ந்தார். கீர்த்தி சுரேஷுடன் பணியாற்றிய தருணங்கள், அங்கு நடந்த நகைச்சுவை சம்பவங்களையும் நகைப்புடன் கூறினார். மாமன்னனின் முக்கியத்துவம் படம் பாதிவரை முடிவடைந்து, அதனை திரையிட்டுப் பார்த்த பின்பே உணர்ந்தேன். பின்பு முழுவதுமாக ஈடுபாடு காட்டினேன் எனவும் கூறினார். அடுத்த படமும் இதேபோல் வெற்றியடையும் என வர்ணனையாளர் கூற, " இல்லை. இதுவே எனது இறுதிப் படம்" என தெரிவித்தார். முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி வெற்றி பெற்றது போல இறுதிப் படமான மாமன்னனும் வெற்றியானது மகிழ்வை அளிப்பதாகக் கூறினார். 

 

கீர்த்தி சுரேஷ், "நான் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் தான் காரணம். பல வருடங்களுக்கு முன் திரைப்படங்கள் வெளியாகி 150, 200 நாட்கள் என எளிதாக எட்டும். ஆனால் இன்றைய சூழலில் 50 வது நாள் என்பது மிகவும் கடினமாக எட்டக் கூடியதாக உள்ளது. இந்தப் படத்தில் பயணித்ததது நிறைய நீங்கா நினைவுகளைத் தந்துள்ளது. வடிவேலுவுடன், நான் நடிப்பேன் என்று நினைக்கவில்லை. தான் சொன்னது போல வடிவேலுவின் உணர்வுப் பூர்வமான காட்சிகள் பார்வையாளர்களை கலங்க வைத்தது" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்கூட்டியே துண்டு போடும் நிர்வாகிகள்; மேடையிலேயே கலாய்த்த அமைச்சர் உதயநிதி!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
Minister Udhayanidhi spoke to administrators about   Deputy Chief Minister

திமுக இளைஞரணி 45வது ஆண்டு விழா இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி தலைமையில் தேனாம்பேட்டையில் நடந்தது. இதில் இளைஞரணி முக்கிய நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி, “மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவிற்குப் பதிலடி கொடுத்துள்ளனர். அரசியல் களத்தில் எப்படி மக்களைச் சந்தித்துப் பேசுகிறோமோ அதேபோன்று இன்றைய காலத்தில் சமூக வலைத்தளமும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பொய்யையே பேசி, பொய்யையே பரப்பி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனை நாம் அம்பலப்படுத்த வேண்டும். அதனால் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருங்கள்.

காலையில் எழுந்தவுடன் முரசொலியைத் தவறாமல் படித்துவிடுங்கள். முதல்வரின் அறிக்கைகள், அரசின் திட்டங்கள் என்னுடைய அறிக்கைகள், என அனைத்தையும் படித்துவிடுங்கள். முரசொலியில் தினமும் ஒரு பக்கத்தை இளைஞர் அணிக்கென்று ஒதுக்கி அதில் கருத்துகளை வெளியிட்டு வருகிறோம். முதல்வர் 234 தொகுதிகளிலும் நூலகம் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதனையேற்று  முதற்கட்டமாக 50 தொகுதிகளிலும் நூலகத்தைத் திறந்துள்ளோம். மிதமுள்ள தொகுதிகளிலும் விரைவில் நூலகம் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கும், மக்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தமிழ்நாடு முழுவதும் பேச்சு போட்டி நடத்தி 100 சிறந்த பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து தலைமையிடத்தில் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கட்டளையிட்டிருந்தார். அதன்படி அதற்கான பணிகளையும் தற்போது தொடங்கியிருக்கிறோம். இதற்காக 30 நடுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அனைத்து மாவட்டத்திற்கு அனுப்பி வைத்து பேச்சாளர்களைத் தேர்வு செய்யவுள்ளோம்.

இந்த மேடையில் அனைவரும் பேசி நான் துணை முதல்வராக வேண்டும் என்று தீர்மானம் எல்லாம் நிறைவேற்றினீர்கள். பத்திரிகையில் வரும் கிசுகிசுக்கள், வதந்திகள் எல்லாவற்றையும் படித்துவிட்டு வந்து இது நடக்கப்போகிறதோ என்று யூகத்தில் நாமும் ஒரு துண்டு போட்டு வைப்போம் என்ற அடிப்படையில் இங்கே பேசியுள்ளனர். இளைஞரணி செயலாளர் பொறுப்புதான் முதல்வரின் மனதிற்கு நெருக்கமான பொறுப்பு. நான் முன்பே கூறியதுபோல, எல்லா அமைச்சர்களுமே எங்களின்  முதல்வருக்குத் துணையாகத்தான் இருப்போம் என்றேன். அதேபோன்று இங்கே இருக்கக்கூடிய அனைத்து அமைப்பாளர்களுமே முதல்வருக்குத் துணையாகத் தான் இருப்போம்.

எனக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும், என் மனதிற்கு நெருக்கமானது இளைஞரணி செயலாளர் பொறுப்புதான். ஆகையால் எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறந்துவிடமாட்டேன். நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்கு உழைத்ததை போன்று வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் வெற்றிக்காக உழைப்போம். 2026 என்ன நடந்தாலும், எந்தக் கூட்டணி வந்தாலும் ஜெயிக்க போவதும் நம்முடைய கூட்டணிதான். அதைமட்டுமே இளைஞரணி தம்பிமார்கள் இலக்காக வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

Next Story

“என்னைக் கண்காணித்து வருகிறார்கள்; பதற்றமாக இருக்கிறது” - மாரி செல்வராஜ்

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Mari Selvaraj said that im being watched so I'm nervous

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் மாரி செல்வராஜ் தற்போது வாழை என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ‘தென் கிழக்கு..’ என்ற முதல் பாடல் வெளியீட்டு விழா நேற்று(18.7.2024) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக இயக்குநர்கள் ராம், பா.ரஞ்சித், பி.எஸ்.வினோத் ராஜ் உள்ளிட்டவர்களுடன் படக்குழுவினர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய மாரி செல்வராஜ், “என்னுடைய கலையை என் அரசியலை மக்கள் கொண்ட சென்ற விதம் எனக்குத் தெரியும். அவர்களின் நம்பிக்கைதான், எனக்கு தொடர்ந்து படங்கள் எடுக்க நம்பிக்கை அளித்தது. நான் சினிமாவுக்கு வந்ததும் முதன்முதலில் எழுதிய கதை 'வாழை'தான். இந்தக் கதையை எடுத்தால்தான் அடுத்த படத்திற்குப் போக முடியும் என நம்பினேன். இது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தின கதை. ‘மாமன்னன்’ படம் வெளியாவதற்கு முன்னரே இப்படத்தை எடுத்துவிட்டேன்.

நான் கிரியேட் செய்கிற எல்லா கதாபாத்திரமும் என் வாழ்க்கையில் பார்த்த மனிதர்களாக உள்ளனர். அவர்கள் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நான் பேசுவதில் எந்தளவு உண்மையுள்ளது, பொய் உள்ளது எனக் கண்காணித்து வருகின்றனர்.அதனால் எனக்குப் பதற்றமாகவுள்ளது. அது மட்டுமில்லாமல் எனக்கு ஒரு கடமை உள்ளது. நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்க, இப்படத்தில் நடித்த சிறுவர்கள் ராகுல், பொன்வேல் ஆகியோர்  இந்த மேடையில் இருப்பதுதான் காரணம். இருவரும் என் சொந்த அக்கா மற்றும் மாமன் மகன்கள். அந்த வயதில் நான் என்னவாக இருந்தேன் என்று எனக்குத் தெரியும்.

இனிமேல் இந்த கலையின் வழியாக இந்த உலகத்தை அவர்கள் புரிந்து கொள்வார்கள். என் ஊருக்குள் கலை நுழையப்போகிறது என்று சந்தோஷமாக உள்ளது, இனிமேல் பசங்களுக்குப் பொறுப்பு வரும். அந்த வயதில் நான் மூர்க்கமாக  இருந்தேன். என் மண்டையில் தோன்றும் விஷயத்திற்கு நான் என்ன பண்ணுவது என்று பைத்தியம் பிடித்த வயதில் அவர்கள் இங்கு உள்ளனர். நான் முட்டி, மோதி அவர்களை உருவாக்குவதற்கான மேடையை கிரியேட் பண்ணிவிட்டேன் என்பதில் மகிழ்ச்சி. அப்படி என்னை உருவாக்கின இயக்குநர் ராம் சாருக்கு என்னுடைய நன்றி” என்றார்