ADVERTISEMENT

'விருமன்' படம் குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட கார்த்தி 

03:07 PM Nov 20, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் கார்த்தி, முத்தையா இயக்கத்தில் உருவாகிவரும் ‘விருமன்’ படத்தில் கவனம் செலுத்திவருகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இதனிடையே, நடிகர் கார்த்தி மதுரையில் இருக்கும் தனது ரசிகர்களைச் சந்தித்துவருகிறார். அந்த வகையில், சமீபத்தில் நடந்த ரசிகர்கள் சந்திப்பில் ‘விருமன்’ படம் குறித்து பேசியுள்ளார். அதில், "உங்கள் அனைவரையும் பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி. நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா. நீண்ட நாளுக்குப் பிறகு ஒரு லோக்கல் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்தி - இயக்குநர் முத்தையா கூட்டணியில் ஏற்கனவே வெளியான 'கொம்பன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT