viruman first single release may25

இயக்குநர்முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் படம் விருமன். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் படத்தின்முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள படக்குழு, இறுதி கட்டபணியில் தீவிரம் காட்டி வருகிறது.

Advertisment

சமீபத்தில் வெளியான படத்தின் முதல் பாடலான "காஞ்ச பூ கண்ணால..." பாடலின் ப்ரோமோ வீடியோநல்ல வரவேற்பை பெற்ற நிலையில் முழு பாடல்குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இந்நிலையில் "காஞ்ச பூ கண்ணால..." பாடலின் முழு பாடல் வரும் 25 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment