Viruman movie Kanja Poovu Kannala Video Promo released

இயக்குநர்முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் படம் விருமன்.இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் படத்தின்முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள படக்குழு, இருக்கட்டபணியில் தீவிரம் காட்டி வருகிறது.

Advertisment

இந்நிலையில் படத்தின் முதல் பாடலான "காஞ்ச பூ கண்ணால..." பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கு கருமாத்தூர் மணிமாறன் வரிகளில் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். கிராமத்து காதல் பாடலாகஉருவாகியுள்ள இப்பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது பலரின்கவனத்தை பெற்று வருகிறது. கார்த்தி நடிப்பில் ஏற்கனவே வெளியான பருத்திவீரன் படத்தில் பிரியாமணியை'ஹே முத்தழகு' என்றுகூப்பிடுவார். இதே போன்று பாடலின் தொடக்கத்தில் கார்த்தி அதிதியை 'ஹே தேனு' என்று கூப்பிடுவது பலரையும் பருத்திவீரன் மைண்ட் செட்டுக்குஅழைத்து சென்றுள்ளது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment