ADVERTISEMENT

பவர்ஃபுல்லான ரோல்... கமல்ஹாசனை இயக்கும் கே.ஜி.எஃப் இயக்குநர்?

05:45 PM May 25, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

'கே.ஜி.எஃப்' படங்களை இயக்கியதன் மூலம் இயக்குநர் பிரசாந்த் நீல் இந்தியா முழுவதும் பிரபலமானார். 'கே.ஜி.எஃப்' படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தெடர்ந்து அதன் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.

இதனிடையே பிரசாந்த் நீல் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை இயக்கி வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, ஜெகபதிபாபு, பிரித்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பெரும் பொருட்செலவில் பான் இந்தியா படமாக உருவாக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நடித்து பிரபலமான ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் 'என்.டி.ஆர்31' படத்தை இயக்கவுள்ளார். மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரம் பவர்புல்லான கதாபாத்திரம் என்பதில் இப்படத்தில் கமல் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால் படக்குழு இவரை தேர்வு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் ஜூன் 3 ஆம் தேதி விக்ரம் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT