/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/615_8.jpg)
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'.இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத்தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் வெளியாகி பெரும் பாராட்டுக்களை பெற்றதோடு, உலகளவில்ரூ.1000 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இதுவரை தென்னிந்திய படங்களானபாகுபலி ஆர்.ஆர்.ஆர் படங்கள் மட்டுமே இந்த ரூ.1000 கோடி வசூல் சாதனையை நிகழ்த்திருந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் 'கே.ஜி.எஃப்2' படம் இணைந்துள்ளது.
இதனிடையே பிரசாந்த் நீல் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும்சலார்படத்தை இயக்கி வருகிறார்.இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, ஜெகபதிபாபு, பிரித்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பெரும் பொருட்செலவில் பான் இந்தியாபடமாக உருவாக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நடித்து பிரபலமான ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் 'என்.டி.ஆர்31'படத்தை இயக்கவுள்ளார். மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு அடுத்தாண்டு இப்படம்வெளியாகும் என தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)