kgf 2 trailer release date announced

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'.இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகி வருகிறது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத்,ரவீனா டாண்டன்பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கியகதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்டபணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

Advertisment

இந்நிலையில்'கே.ஜி.எஃப் படத்தின் இயக்குநர்பிரசாந்த் நீலின்பிறந்தநாளை முன்னிட்டு 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்தின் ட்ரைலர்குறித்தஅறிவிப்பைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி'கே.ஜி.எஃப் சேப்டர் 2'படத்தின் ட்ரைலர்வரும் 27 ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்படம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment