ADVERTISEMENT

"அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம்" -கமல்ஹாசன்

03:04 PM Nov 09, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமாகிய கமல்ஹாசன், தனது 66 வது பிறந்தநாளை கடந்த 7 ஆம் தேதி கொண்டாடினர். அதை தொடர்ந்து அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், ரசிகர்கள், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் டைட்டில் டீஸர் வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

இந்தநிலையில், தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும், ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள கமல், அடுத்த பிறந்த நாளை கோட்டையில் கொண்டாடுவோம் என கூறியுள்ளார்.

இதுகுறித்து கமல், "என்னுடைய பிறந்தநாளுக்கு நேரிலும், தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்திய ரசிகர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பிற துறை ஆளுமைகள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் பிறந்தநாளை 'நற்பணி' தினமாக கொண்டாடிய எங்கள் மக்கள் நீதி மய்யத்தின் சகோதரர்களை மனதாரத் தழுவிக்கொள்கிறேன். உங்கள் அன்பிற்கு மென்மேலும் தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள 'உள்ளும் புறமும்' சீரமைப்பேன். அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம்" என கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT