/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/439_4.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள 'விக்ரம்' படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.150 கோடி வசூலும் உலகம் முழுவதும் ரூ.400 கோடியையும் நெருங்கியுள்ளது. கமல் படங்களிலே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை 'விக்ரம்' படம் பெற்றுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இளையராஜா, கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இளையராஜாவின் ட்விட்டர் பதிவில், "வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் ச-கோ-த-ர-ரே!. கமல்ஹாசன். மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது அதோடு உங்கள் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது. விக்ர மாமுகம் தெரியுதே -அது வெற்றிப் புன்னகை புரியுதே! என மாற்றிக்கொள்ளலாம்" என குறிப்பிட்டு கமலை டேக் செய்து ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
கமல்ஹாசன், இளையராஜாவின் பதிவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "நம் அன்பை எப்போதாவதுதான் நாம் பிரகடனப்படுத்திக்கொள்வோம். என்றென்றும் என் அன்பு உங்களுக்கும், உங்கள் ஆசி எனக்கும் உண்டு என உணர்ந்த உங்கள் தம்பிகளில் நானும் ஒருவன். நம் பயணம் என்றும்போல் தொடர விழையும்உங்கள் நான்" என குறிப்பிட்டுள்ளார்.
நம் அன்பை எப்போதாவதுதான் நாம் பிரகடனப்படுத்திக்கொள்வோம். என்றென்றும் என் அன்பு உங்களுக்கும், உங்கள் ஆசி எனக்கும் உண்டு என உணர்ந்த உங்கள் தம்பிகளில் நானும் ஒருவன். நம் பயணம் என்றும்போல் தொடர விழையும்
உங்கள் நான். https://t.co/54VwAY3Iul
— Kamal Haasan (@ikamalhaasan) June 21, 2022
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)