ADVERTISEMENT

ஓடிடியில் கலக்கும் சுயாதீன திரைப்படம் ‘காதலிசம்’

11:13 AM Jun 06, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேசிய விருது பெற்ற ‘டூலெட்’ படம் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சந்தோஷ் நம்பிராஜன். தற்போது தானே இயக்கி நடித்துள்ள சுயாதீன திரைப்படமான ‘காதலிசம்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தின் காரணமாக திருமணத்தையே வெறுக்கும் புகைப்படக்கலை மீது பெரும் காதல் கொண்ட புகைப்படக் கலைஞரான சந்தோஷ் நம்பிராஜன் ஒரு பெண்ணிடம் காதல் வயப்படுகிறார். இருவரும் அவர்கள் காதல் வாழ்வில் மிக சந்தோஷமாக இருக்கின்றனர். இவர்கள் காதல் மிக ஆழமாக செல்லும்பொழுது நாயகியின் தந்தை இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதை அடுத்து நாயகி வீட்டை விட்டு வெளியே சென்று காதலனுடன் லிவ்விங் வாழ்வில் இணைகிறார்.

இருவரும் கணவன் மனைவி போல் லிவ்விங் டுகெதர் வாழ்வில், அன்பாகவும் காதலோடும் வாழ்கின்றனர். இதன் பலனாக நாயகி கர்ப்பம் அடைகிறார். அந்த சமயம் தான் கர்ப்பம் ஆகிவிட்டதால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நாயகன் சந்தோஷ் நம்பிராஜனிடம் நாயகி கேட்கிறார். திருமணத்தையே அறவே வெறுக்கும் நாயகனோ அதை மறுக்கிறார். இதனால் இருவருக்குள்ளும் பிரிவு ஏற்படுகிறது. இதை அடுத்து இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தார்களா, இல்லையா? கருவில் உருவான குழந்தையின் நிலை என்னவானது? என்பதே காதலிசம் படத்தின் மீதி கதை.

நாயகன் சந்தோஷ் நம்பிராஜனே இப்படத்தை இயக்கி நடித்து இருக்கிறார். இவரைத் தவிர படத்தில் அனைவரும் புது முகங்களாக நடித்திருக்கின்றனர். இப்படம் வெளிநாடுகளில் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இன்றைய இளைஞர்களின் பல்சை பிடித்து அதற்கு ஏற்றார் போல் கதை தேர்வு செய்திருக்கிறார். திரைக்கதை, வசனம் ஆகியவையும் இக்கதைக்கு ஏற்றதாக அமைந்து படத்தை நம்முடன் ஒன்ற வைத்துள்ளது. குறிப்பாக இப்படத்தின் வசனம் மிக அழுத்தமாகவும், ஆழமாகவும் அமைந்து பல இடங்களில் நம்மை சிந்திக்கவும் வைத்திருக்கிறது. அதேபோல் காதல் வாழ்க்கையில் தற்போது உள்ள சூழலில் பிராக்டிக்கலான வாழ்க்கையை மிக எளிமையாக பிரதிபலிக்கும்படி இப்படத்தை கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நம்பிராஜன். ஒரு சுயாதீன திரைப்படமாக வெளியாகி இருக்கும் இப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT