Skip to main content

கபிலன் வைரமுத்துவின் புதிய நூல்! 

Published on 23/09/2020 | Edited on 23/09/2020
ambarathuni

 

 

கவிஞர் வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து, கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் என சினிமா, காட்சி ஊடகத்தில் செயல்பட்டு வருகிறார். 

 

பல வெற்றி பாடல்களை எழுதியுள்ள கபிலன், 'கவண்', 'விவேகம்' உள்ளிட்ட திரைப்படங்களின் கதை உருவாக்கத்திலும் பங்காற்றியுள்ளார். சினிமாவில் தொடர்ந்து பணியாற்றி வந்தாலும் அவ்வப்போது புத்தகங்கள் எழுதி வெளியிட்டு வருகிறார். 

 

இவரது 'உயிர்ச்சொல்', 'மெய்நிகரி' ஆகிய நாவல்கள் பரவலான கவனத்தை பெற்றவை. தற்போது, கபிலன் வைரமுத்து எழுதியுள்ள சிறுகதை தொகுதியின் பெயர் 'அம்பறாத்தூணி'. இந்த நூலின் தலைப்பையும், அட்டைப்படத்தையும், அறிமுகம் செய்யும் நிகழ்படத்தையும் இயக்குனர் கே.வி.ஆனந்த் வெளியிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கபிலன் வைரமுத்துவின் புதிய நாவலை வெளியிட்ட இயக்குநர் பாரதிராஜா 

Published on 10/12/2022 | Edited on 10/12/2022

 

Director Bharathiraja who released Kapilanvairamuthu's new novel

 

கபிலன் வைரமுத்து எழுதிய ‘ஆகோள்’ நாவலை  இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்.

 

ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவு.  எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்துவின் புதிய நாவலை இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வெளியிட்டார்.  ஆகோள் என்று பெயரிடப்பட்ட நாவல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்ற இனச் சட்டம் குறித்து ஒரு நவீன அணுகுமுறையை முன் வைக்கிறது. இந்த நாவல் நிகழ்கால தொழில்நுட்ப உலகின் பெருந்தரவு கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. 1920 ஆம் ஆண்டு கை ரேகை சட்டத்திற்கு எதிராக பெருங்காமநல்லூரில் நிகழ்ந்த போராட்டம் நாவலின் ஒரு முக்கியப் பகுதியாக இடம் பெற்றிருக்கிறது. இயக்குநர் பாரதிராஜா நூலை அறிமுகம் செய்யும் சிறப்புக் காணொளி ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

 

ஆகோள் குறித்து கபிலன் வைரமுத்து கூறுகையில்: சங்க காலத்தில் சிற்றரசுகளுக்கு இடையே நிகழ்ந்த போர்களில் எதிராளிகளின் ஆடு மாடுகளைக் களவாடி வரும் செயலுக்கு ஆகோள் என்று பெயர். இது களவுச் செயலாகவும் வீரச் செயலாகவும் பார்க்கப்பட்டது. எதிராளியின் வளங்களில் ஒன்றைக் களவாடும் செயல் என்ற பொருளில் என் நாவலுக்கு ஆகோள் என்று தலைப்பிட்டிருக்கிறேன். இந்தக் கதையில் இடம்பெறும் தொழில்நுட்ப களம் குறித்தும், நூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு போராட்டம் குறித்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கள ஆய்வு செய்து எழுதியிருக்கிறேன். வாசகர்களுக்கு இது பயனுள்ள பயணமாக இருக்கும் என நம்புகிறேன்.

 

நூலின் பதிப்பாளர் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் கூறுகையில்: கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், சிறுகதை, கவிதை, நாவல் என மொழியின் அனைத்துத் தளங்களிலும் இயங்கிக்கொண்டிருக்கும் கபிலன் வைரமுத்துவின் புதிய வரவு ஆகோள். இந்த நாவலின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் அதுவே ஒரு தனிக்கதையாக விரியும். இதுவரை தமிழ் இலக்கிய உலகம் காணாத ஒரு முழுமுதற் தொழில்நுட்ப உலகை கபிலன் வைரமுத்து அறிமுகப்படுத்துகிறார். குற்ற இனச் சட்டம் குறித்த ஒரு புதிய பார்வையை இந்த நாவல் வழி விவாதித்திருக்கிறார். 

 

ஆகோள் கபிலன் வைரமுத்துவின் நான்காவது நாவல். கபிலனின் முந்தைய நாவலான மெய்நிகரி ‘கவண்’ என்ற பெயரில் திரைப்படமானது குறிப்பிடத்தக்கது. குழந்தை பிறந்ததும் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்து கபிலன் வைரமுத்து எழுதிய நாவலை 2012-ஆம் ஆண்டு இயக்குநர் கே.பாலசந்தர் வெளியிட்டார். மெய்நிகரி என்ற நாவலை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். கபிலன் வைரமுத்துவின் சிறுகதைத் தொகுதியான அம்பறாத்தூணி என்ற நூலை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார். தற்போது இயக்குநர் பாரதிராஜா கபிலன் வைரமுத்துவின் நான்காவது நாவலை வெளியிட்டிருக்கிறார். தமிழ்த் திரையுலகின் ஆகச் சிறந்த இயக்குநர்களின் கரங்களால் தன் படைப்புகள் வெளி வந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக கபிலன் வைரமுத்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

 

 

Next Story

சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் வாசிப்பு விழாவிற்கு கபிலன் வைரமுத்து, சோ.தர்மன் நூல்கள் தேர்வு!

Published on 20/03/2021 | Edited on 20/03/2021

 

kabilan vairamuthu

 

சிங்கப்பூர் தேசிய வாசிப்பு இயக்கத்தின் முக்கிய நிகழ்வான வாசிப்பு விழாவில் கபிலன் வைரமுத்து எழுதிய மெய்நிகரி மற்றும் அம்பறாத்தூணி, சோ தர்மன் எழுதிய சூல் ஆகிய நூல்கள் இடம் பெறுகின்றன.

 

இது குறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், "நான்கு அதிகாரத்துவ மொழிகளில் சிங்கப்பூர் வாசகர்களின் வாசிப்பை ஊக்குவிக்க சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் சிறப்பு நிகழ்வுதான் சிங்கப்பூர் வாசிப்பு விழா. உரைகள், பட்டறைகள் போன்ற வழக்கமான நிகழ்ச்சிகளுக்கு அப்பால் எளிமையான முறையிலும் புதுமையான வழிகளிலும் வாசிப்பை அறிமுகம் செய்ய முனைகிறது இந்த வாசிப்பு விழா. இதில், கலைச் சிற்பங்கள், விளையாட்டுகள், புதுமையான இலக்கியத் தடங்கள் போன்றவை அடங்கும். தேசிய வாசிப்பு இயக்கத்தின் மிக முக்கியமான நிகழ்வு வாசிப்பு விழா. இளம் எழுத்தாளர் கபிலன் வைரமுத்துவின் மெய்நிகரி என்ற நாவலும், அம்பறாத்தூணி என்ற சிறுகதைத் தொகுப்பும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ தர்மனின் சூல் என்ற நாவலும் வாசிப்பு விழாவின் சிறப்பு அம்சங்களாக இடம் பெறுகின்றன. நூல்கள் மூலமும் அவற்றைச் சுற்றிய உரையாடல்கள் மூலமும் கற்றலை ஊக்குவிப்பதற்கு பொருத்தமான நூல்களாக இவை அமைந்துள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

தொலைக்காட்சி ஊடகத்தில் பணியாற்றும் ஐந்து இளைஞர்களின் அனுபவங்கள் வழி நிகழ்கால காட்சி ஊடகத்தின் பின்னணியை விவரிக்கும் மெய்நிகரி கபிலன் வைரமுத்துவின் மூன்றாவது நாவல். இது, 2014-ஆம் ஆண்டு வெளிவந்தது. பதினைந்து சிறுகதைகளைக் கொண்ட அம்பறாத்தூணி கபிலன் வைரமுத்துவின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பு. இது கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியானது.  2019ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதை வென்ற நூல் எழுத்தாளர் சோ தர்மன் எழுதிய சூல் என்ற நாவல். 1947-ல் சுதந்திரம் கிடைத்தபோது, தமிழகத்தில் 39,640 கண்மாய்கள் இருந்தன. அந்த கண்மாய்களின் இன்றைய நிலை என்ன என்பதே ‘சூல்’ நாவலின் மையக்கரு. சூல் என்றால் நிறைசூலி. உயிரை உற்பத்தி செய்பவள். பிரசவிக்கும் தாயாக அந்த நாவலை உருவகப்படுத்தியுள்ளார் சோ தர்மன். 

 

நூலக வாரியத்தின் வாசிப்பு விழாவில் இவ்விரு எழுத்தாளர்களும் கெளரவிக்கப்படவுள்ளனர்.