ADVERTISEMENT

விக்னேஷ் சிவன் பிறந்தநாள் ஸ்பெஷல்... ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட பாடலை வெளியிட்ட படக்குழு!

03:53 PM Sep 18, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் பூஜையுடன் தொடங்கிய படக்குழு, இரண்டாம்கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தியது. அங்கு முழுவீச்சில் நடந்துவந்த படப்பிடிப்பு, கரோனா இரண்டாம் அலை காரணமாகப் பாதியில் தடைப்பட்டது. பின், இயல்புநிலை திரும்பியதும் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, தற்போது புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்திவருகிறது.

இந்த நிலையில், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘டூ...டூ...டூ...’ என்ற பாடலை படக்குழு இன்று (18.09.2021) வெளியிட்டுள்ளது. படத்தின் இயக்குநரான விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு இந்தப் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கான வரிகளை விக்னேஷ் சிவன் எழுத, அனிருத், சுனிதி சௌஹான், சஞ்சனா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT