
நடிகை சமந்தா நடித்த ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற சர்ச்சைக்குரிய வெப் தொடர் சென்ற ஜூன் மாதம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் சமந்தா தமிழீழப் போராளியாக நடித்துள்ளார். இது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும், இந்தப் படத்துக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் 'தி ஃபேமிலி மேன் 2' வெப்தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகையாக நடிகை சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதைக் கொண்டாடும் வகையில்நடிகர் விஜய்சேதுபதி நடிகை சமந்தாவுக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்துவருகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா, சமந்தா இருவரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்துவருகிறது. இந்தப் படப்பிடிப்பு தளத்தில், விருது வென்ற சமந்தாவை பாராட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் விஜய்சேதுபதி, விக்னேஷ் சிவன், நயன்தாரா, சமந்தா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)