/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/maxresdefault_154.jpg)
நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பானது சென்னையில் துவங்கியது. சில நாட்கள் மட்டுமே நடந்த படப்பிடிப்பில்சில முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனையடுத்து, படக்குழு ஹைதராபாத் விரைந்தது. ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Kaathuvaakula-Rendu-Kaadhal.jpg)
இதையடுத்து, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமானாலும் நடிகர்களின் கால்ஷீட் தேதிகளில் குழப்பம் ஏற்பட்டதால் இப்படத்தின் படப்பிடிப்புதொடங்காமலேயே இருந்துவந்தது. இந்நிலையில், ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புதற்போது புதுச்சேரியில் தொடங்கியுள்ளது. அங்கு தொடர்ந்து 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்தை அடுத்த வருட தொடக்கத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)