ADVERTISEMENT

'ராம்போ' விஜய் சேதுபதி... இணையத்தில் வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

11:40 AM Nov 15, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, அடுத்தக்கட்ட படப்பிடிப்பை முழுவீச்சில் நடத்திவருகிறது. சமீபத்தில், வெளியான படத்தின் ‘டூ...டூ...டூ...’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ .படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில், ‘ராம்போ’ என்ற எழுத்துக்களுடன் நடிகர் விஜய் சேதுபதி இறுக்கமான முகத்தோடு தோன்றியுள்ளார். தற்போது இந்தப் போஸ்டர் இணையத்தில் வைரலாகிவருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT