Published on 15/11/2021 | Edited on 15/11/2021

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, அடுத்தக்கட்ட படப்பிடிப்பை முழுவீச்சில் நடந்துவருகிறது.

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் இன்று (15.11.2021) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சமந்தா இடம்பெற்றுள்ள புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், கதிஜா என்ற சமந்தா கதாபாத்திரத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது. அடுத்தடுத்த போஸ்டர்களைப் படக்குழு வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.