Skip to main content

ஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா!

Published on 05/08/2020 | Edited on 05/08/2020
teja

 

 

கடந்த மார்ச் மாதத்திலிருந்து கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் அண்மையில் ஒருசில தளர்வுகளுடன் ஒருசில பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

 

அந்த வகையில், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வெப் தொடர்கள் படப்பிடிப்புகளை குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளர்களை வைத்து நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

 

ஏற்கனவே தெலுங்கு தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை நவ்யா சாமி, அவருடன் இணைந்து நடித்த ரவிகிருஷ்ணா ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. பாஹர்வாடி என்ற இந்தி நகைச்சுவை தொடர் ஷூட்டிங்கில் பங்கேற்ற ஒருவர் கரோனா தொற்றில் பலியானார். அதே படப்பிடிப்பில் பங்கேற்ற மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

 

இந்த நிலையில் தெலுங்கு வெப் சீரிஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரபல இயக்குனர் தேஜாவும் தற்போது கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேஜா தெலுங்கில் ஜெயம், சித்திரம், நேனு ராஜூ நேனு மந்திரி, ஒக்க வி சித்திரம், நிஜம் உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஹனுமன்’ - புது அப்டேட் வெளியீடு 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
jai hanuman new update

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஹனுமான். தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கவுரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சவுரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்துள்ளனர்.  

இப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் வேர்ல்ட் படமாக வெளியானது. பின்பு டிஸ்னி பிலஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஏப்ரல் 5 முதல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமாகிவருகிறது. 

இந்த நிலையில் இயக்குநர் பிரசாந்த் வர்மா, அவரது சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து (PVCU) மற்றொரு படத்தை எடுக்கவுள்ளார். ஜெய் ஹனுமான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஹனுமான் கதையின் முந்தைய காலகட்டத்தில் நடப்பதை பற்றி இருக்குமென ஹனுமான் படத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படம் மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது.  

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் முக்கியமான நாளில் படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளை தொடங்கிய இயக்குநர்,  ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். போஸ்டரில் ஹனுமான் ஒரு குன்றின் மீது கையில் சூலாயுதத்துடன் நிற்க, நெருப்பை கக்கும் டிராகன் பின்னணியில் இருப்பதைக் காணலாம். இப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் 3டியில் வெளியாகவுள்ளது. படக்குழு இன்று, ஹனுமான் படத்தின்  100 நாட்கள் நிறைவு விழாவினை கொண்டாடுகிறது குறிப்பிடதக்கது. 

Next Story

காவல் நிலையத்தை நாடிய விஜய் தேவரகொண்டா

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
vijay devarakonda family star trol complaint issue

கீதா கோவிந்தம் பட இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் மீண்டும் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள தெலுங்கு படம் ஃபேமிலி ஸ்டார். விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருக்க திவ்யன்ஷா கவுசிக், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். 

இப்படம் கடந்த 5ஆம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தியில் வெளியான நிலையில் கலைவையான வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமூக வலைத்தளங்களில் ட்ரோல்களுக்கும் உள்ளாக்கப்பட்டது. வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் ட்ரோல்களுக்கு எதிராக விஜய் தேவரகொண்டா தரப்பில் காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

விஜய் தேவரகொண்டாவின் மேலாளர் அனுராக் மற்றும் அவரது ரசிகர் மன்ற தலைவர் நிஷாந்த் குமார் அளித்த புகாரில், “விஜய் தேவரகொண்டாவின் வளர்ச்சியை விரும்பாதவர்கள் இப்படத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தனிநபராகவும் குழுக்களாகவும் இதை செய்து வருகின்றனர். இதன் காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் விஜய் தேவரகொண்டா தன் தரப்பில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.