ADVERTISEMENT

தடங்கலுக்கு பின் தொடங்கும் இந்தியன் 2!

02:56 PM Aug 07, 2019 | santhoshkumar

'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் துவங்கி நடைபெற்ற நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஷூட்டிங் நிறுத்தப்பட்டதற்கு காரணம், கமல்ஹாசனுக்கு மேக்கப்பில் முழு திருப்தியில்லாததுதான் காரணம் என்று சிலர் சொல்லி வந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதையடுத்து கமல்ஹாசன் தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டார். மேலும் பட்ஜெட் விவகாரத்தில் இயக்குநர் ‌ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதனால் படத்தை கைவிட்டுவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஷங்கருக்கும், லைக்காவிற்கும் உடன்பாடு ஏற்பட்டுவிட்டதால் 'இந்தியன் 2’ படப்பிடிப்பு வருகின்ற 12ஆம் தேதி தொடங்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதில் பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போது இப்படத்திற்கு 200 கோடி பட்ஜெட் என்று முடிவு செய்துள்ளதாகவும், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT