Skip to main content

'இந்தியன் 2' குறித்து ஷங்கர் வெளியிட்ட புதிய அப்டேட்

 

indian 2 next schedule shoot september 3 week

 

ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கிறார். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வந்தார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் நிறுத்தப்பட்டிருந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு  பணிகள்  மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் பட விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர், "இந்தியன் 2 படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த மாதம் 3வது வாரத்தில் தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் இதில் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதனிடையே இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த விவேக் கடந்தாண்டு மறைந்த நிலையில் அவருக்கு பதில் ஜோக்கர், ஆரண்ய காண்டம், மின்னல் முரளி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான குரு சோமசுந்தரம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.