Skip to main content

ஹெலிகாப்டரில் பறக்கும் இந்தியன் தாத்தா

 

kamalhaasan attend indian 2 shooting by helicopter daily

 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முன்னதாக இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து சமீபத்தில் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னையில் நடைபெற்றது. 

 

இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது திருப்பதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படு தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் படப்பிடிப்பு தளத்திற்கு கமல் தினமும் தனி ஹெலிகாப்டர் மூலம் வந்து கலந்து கொள்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில்  வெளியாகியுள்ளது. 

 

முன்னதாக இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல்ஹாசன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதைத் தொடர்ந்து தற்போது ஹெலிகாப்டரில் கமல் செல்லும் வீடியோவும் ஹெலிகாப்டர் அருகில் கமல் நிற்கும் புகைப்படமும் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.