ADVERTISEMENT

காஜல் அகர்வாலுக்கு பதிலாக கமலுடன் இணையும் பிரபல நடிகை

03:22 PM Nov 16, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கிறார். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துவந்தார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டு போனது. இதனால் 'இந்தியன் 2' படம் மீண்டும் தொடங்கப்படுமா எனப் பலரும் கேள்வி எழுப்பிவந்தனர்.

இதையடுத்து தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குநர் ஷங்கருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது. இதனால் விரைவில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், தற்போது நடிகை காஜல் அகர்வால் படத்திலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கெளதம் கிச்சலு என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அதனால் காஜல் அகர்வால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காஜல் அகர்வாலுக்கு பதிலாக நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன், த்ரிஷா கூட்டணியில் ‘மன்மதன் அம்பு’, ‘தூங்காவனம்’ ஆகிய திரைப்படங்கள் வெளியான நிலையில் மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி இணைய உள்ளது. மேலும், 'இந்தியன் 2' படத்தில் காஜல் அகர்வால் நடித்த காட்சிகள் அனைத்தும் மீண்டும் படமாக்கப்பட உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT