ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தில் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே இயக்குநர் ஷங்கர் ராம் சரணை வைத்து ஆர்.சி 15 படத்தை இயக்கி வருகிறார். எனவே ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் ஆர்.சி 15 ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பும் நடைபெறும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்துகொண்டுள்ளார். இதனை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ஷங்கருடன் இருக்கும் சில புகைப்படங்கள் மற்றும் ஒரு சிறிய வீடியோவை பகிர்ந்துள்ளார். இதனிடையே காஜல் அகர்வால் தனது சமூக வலைதளபக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக குதிரையுடன் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பகிர்திருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
#Indian2 from today.
@Udhaystalin@shankarshanmugh@LycaProductions@RedGiantMovies_pic.twitter.com/TsI4LR6caE
— Kamal Haasan (@ikamalhaasan) September 22, 2022