ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவிலிருந்து கலைஞருக்கு இரங்கல் தெரிவித்த இளையராஜா 

02:53 PM Aug 09, 2018 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

கலைஞர் கருணாநிதி மறைவுக்கு ஆஸ்திரேலிய நாட்டில் இசை நிகழ்ச்சி நடத்த சென்றிருக்கும் இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்..."தமிழ் பெருங்குடி மக்களே நமக்கெல்லாம் துக்க தினமாக இன்று ஆகிவிட்டது. டாக்டர் கலைஞர் ஐயா மறைந்தது நமக்கு எல்லாம் துக்க தினம் தான். இந்த துக்கத்தில் இருந்து எப்படி நாம் மறந்து, திரும்பி வரப்போகிறோம் என்று தெரியவில்லை. அரசியல் தலைவர்களிலேயே கடைசி அரசியல் தலைவர் ஐயா கலைஞர் அவர்கள். சினிமா துறையிலே தூய தமிழ் வசனங்களை அளித்த கடைசி வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர் அவர். அரசியல், சினிமா, தமிழ், கலை, இலக்கியம் என்று எல்லா துறைகளிலும் தலைசிறந்து விளங்கிய ஐயாவின் இழப்பு உண்மையிலேயே ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இந்த நேரத்தில் நான் இங்கு ஆஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக எனது குழுவினருடன் வந்து இருக்கிறேன். இந்த நிகழ்ச்சி ஆறு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது என்பதால் தவிர்க்க முடியவில்லை. ஐயாவின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT