ADVERTISEMENT

'கனா படத்தினால் தான் கிரிக்கெட்டர் ஆனேன்' - மனம் திறந்த யுஏஇ கேப்டன்

06:19 PM Jun 14, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம் 'கனா'. இந்த படத்தை பாடகர், பாடலாசிரியர், நடிகர் என அறியப்பட்ட அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் சத்யராஜ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதனையடுத்து சமீபத்தில் சீன மொழியிலும் இப்படம் வெளியானது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன், யுஏஇ-ன் மகளிர் கிரிக்கெட் அணி அண்டர் 19-ன் கேப்டன் தீர்த்தா சதிஷிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் அணி, ஐசிசி அண்டர் 19-ன் மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு தாய்லாந்து அணியை வீழ்த்தி தேர்வுபெற்றது. இந்த போட்டியில் தன் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணி வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார் தீர்த்தா சதிஷ்.

தீர்த்தா சதிஷ் , தமிழகத்தில் பிறந்து துபாயில் வாழ்கிற இவர் சமீபத்தில் ஊடகத்திற்கு ஒரு பேட்டி அளித்தார். அதில், " முதலில் அமீரக பயிற்சியாளர் ஒருவர் என்னிடம் அண்டர் 19-ன் டீமில் என்னை சேரச்சொல்லி கேட்டார். அப்போது கிரிக்கெட் மீது ஆர்வமில்லை என கூறி நிராகரித்து விட்டேன். அதன் பிறகு தான் 'கனா' படம் வெளியானது. அந்த படத்தை பார்த்த பிறகு 'நான் ஏன் முயற்சிக்கக்கூடாது' என்ற எண்ணத்துடன் முயற்சி செய்து இப்போது அண்டர் 19-ன் டீமிற்கு கேப்டனாக உள்ளேன்" என கூறி நெகிழ்ந்தார். இதனிடையே தீர்த்தா சதிஷ் அளித்த பேட்டியை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, " இது கனா படத்திற்கு கிடைத்த மற்றுமொரு அங்கிகாரம் " என குறிப்பிட்டு தீர்த்தா சுரேஷிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT