kanaa movie release china

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘கனா’ படத்தில், ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன், சத்தியராஜ்உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை பிரபல பாடகர், பாடலாசிரியர், நடிகராக அறியப்பட்ட அருண்ராஜா காமராஜ் இயக்கினார். சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும்வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து கனா படத்திற்கு தமிழில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும்ரீமேக் செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில் இப்படம்சீனா மொழியில் வெளியாகியுள்ளது. அதன்படி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான 'கனா' சீனாவில் மார்ச் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்தகவலை தனது ட்விட்டர் பதிவின்மூலம் உறுதி செய்த படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன் அதற்கான போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

Advertisment