ADVERTISEMENT

'நடிகைகளை மூளைச்சலவை செய்கிறார்கள்' - பாலியல் தொல்லை குறித்து ஹனிரோஸ் உருக்கம் 

01:35 PM Jun 23, 2018 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிகைகளுக்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பிலுருந்து பாலியல் தொல்லைகள் கொடுப்பதாக தற்போது நடிகைகள் பலரும் தைரியமாக வெளியுலகுக்கு கொண்டுவந்து தங்கள் எதிர்ப்புகளை காட்டுவது நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இந்நிலையில் மலையாள நடிகை ஹனி ரோசும் இப்பட்டியலில் தற்போது இணைந்துள்ளார். தமிழில் காந்தர்வன், சிங்கம்புலி, மல்லுக்கட்டு உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள இவர் மலையாள பட உலகில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து பேசியபோது... "மலையாள பட உலகிலும் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது. ஆனால் அதை ஏற்பதும் ஏற்காததும் நமது கையில்தான் உள்ளது. நடிக்க வாய்ப்பு கேட்கும் ஆரம்ப காலத்தில் எல்லா நடிகைகளுமே போராடத்தான் வேண்டி இருக்கிறது. அப்போது சிலர் நடிகைகளை மூளைச்சலவை செய்வார்கள். நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மலையாள படத்தில் நான் நடித்த முத்த காட்சி படத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்தியது வேதனையாக இருந்தது" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT