mr.chandramouli

rajini

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

அரசியல் அறிவிப்பு அறிவித்தப்பின்னும் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரஜினிகாந்த் அடுத்து கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர் சங்கிலி முருகன் ரஜினியிடம் கால்ஷீட் கேட்டபோது ரஜினியே இந்த தகவலை அவரிடம் கூறியதாக செய்திகள் பரவி வருகின்றன. ரஜினிகாந்த் ஏற்கனவே முத்து, படையப்பா, கோச்சடையான், லிங்கா ஆகிய படங்களில் கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">