ADVERTISEMENT

''இந்த படத்துக்கு இசையமைச்சது ரொம்ப சவாலா இருந்துச்சி..!'' - ஹிப்ஹாப் ஆதி  

11:02 AM Aug 16, 2019 | santhosh

ஜெயம் ரவி , காஜல் அகர்வால் இணையாக நடிக்க இவர்களோடு சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு ஆகியோரும் நடித்து, வேல்ஸ் பிலிம் இன்டெர்னஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் உருவான "கோமாளி" சுதந்திர தினமான நேற்று வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்திற்கு இசையமைத்ததை குறித்து ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசும்போது...

ADVERTISEMENT

ADVERTISEMENT

"கோமாளி" படத்தின் பின்னணி இசை கோர்ப்பு மிக மிக சவாலாக இருந்தது. எல்லா உணர்ச்சிகளின் கலவையான படம் என்பதால், குறிப்பிட்ட ஒரு பாணியை மட்டுமே கடைப்பிடிக்க முடியவில்லை. இயக்குனர் பிரதீப் என்னிடம் கதை சொன்ன வினாடியே இந்த சவால் எனக்கு புலப்பட்டது. 90க்களில் பிறந்த எனக்கு அந்தக் காலக் கட்டத்தின் உணர்ச்சிகள் எனக்கு எளிதாகவே புரிந்தது. என்னால் அந்த திரை நிகழ்வுகளோடு தொடர்ப்பு கொள்ள முடிந்தது. இதுவே என்னை வீரியத்தோடு வேலை செய்ய வைத்தது. பாடல்களை பொறுத்தவரை இயக்குனர் பிரதீப், ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், இந்தப் படத்தின் நடிகர் நடிகையர் , மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த வெற்றி உரியது. பாடல்கள் அனைத்துமே. காட்சி அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட பாடல்கள் ஆகும். அந்த அழகியல் கூடிய காட்சி அமைப்பே பாடல்களின் வெற்றிக்கு மூல காரணம். படத்தில் உள்ள சிறந்த காட்சிகளை வரிசைப் படுத்துவது மிக கடுமையானது. ஏனென்றால் ஒவ்வொரு காட்சியுமே மற்ற காட்சிகளுக்கு சவால் விடும். முழுநீள ஜனரஞ்சகமான படத்தின் அர்த்தம் "கோமாளி"தான். எல்லா காட்சிகளும் அபாரம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சென்னை வெள்ளம் பற்றிய காட்சிதான்'' என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT