தமிழ் சினமாவில்இசையமைப்பாளராகஅறிமுகமான ஆதி, ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமானார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'சிவகுமாரின் சபதம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து நடிகர் ஆதி, அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கும் 'அன்பறிவு' படத்தில் நடித்துள்ளார். இதில் ஆதிக்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார். நெப்போலியன், விதார்த், தீனா ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யா ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆதி இசையமைக்கிறார். மதுரை கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
சமீபத்தில், ‘அன்பறிவு’ படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத்தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போதுஇதனைப் படக்குழு உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக நடிகர் ஆதி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "அன்பை பெருக்கி, அறிவை விதைத்து, குடும்பத்துடன் கொண்டாடி மகிழ, உங்களின்பேராதரவோடுடிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ‘அன்பறிவு’ படம் விரைவில் வெளியாகும்" எனக்குறிப்பிட்டுள்ளார்.
Anbai perukki, Arivai vithaithu, kudumbathudan kondaadi magizha, ungalin peraadharavodu namadhu @DisneyPlusHS -il #AnbarivuOnHotstar#DisneyPlusHotstarMultiplex#SambavamStarts@SathyaJyothi_@actornepoleon@dir_Aswin@madheshmanickam@vidaarth_actor@kashmira_9pic.twitter.com/FSEPSbuqPW
— Hiphop Tamizha (@hiphoptamizha) December 15, 2021