ADVERTISEMENT

'சூரரைப் போற்று' படத்தில் ஜி.வி. பிரகாஷ் பாடிய பாடலின் அப்டேட்...

12:50 PM Nov 10, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூரரைப் போற்று' படத்தில் நடித்துள்ளார். கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

ADVERTISEMENT

சூரரைப் போற்று படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸர் முன்பே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால், படத்தின் விளம்பரப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, படத்திலுள்ள மூன்று பாடல்களின் லிரிக்கல் வீடியோ ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது.

இந்தநிலையில், இப்படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் பாடிய 'உசுரே' பாடல் இன்று வெளியாகவுள்ளது. இதனை ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் முழு இசை ஆல்பமும் நாளை (நவம்பர் 11) வெளியாகும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT