ADVERTISEMENT

கவுண்டமணியுடன் நடிக்கும் சிவகார்த்திகேயன்

12:32 PM Jul 18, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிவகார்த்திகேயன், 'டான்' படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தை 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'சுரேஷ் புரொடக்ஷன்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இதையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக 'மண்டேலா' படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பை படக்குழு அண்மையில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் கவுண்டமணி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் அவரின் கதாபாத்திரம் காமெடி கலந்த குணச்சித்திர கதாபாத்திரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்கக்கோரி சிவகார்த்திகேயன் கவுண்டமணியை நேரில் சென்று சந்தித்ததாகவும், அதன் பிறகு அவர் நடிக்க ஒகே சொன்னதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT